அங்கீகாரம் மீதான உலக மாநாடு (WOSA - 2018)
September 10 , 2018
2269 days
649
- புதுதில்லியில் அங்கீகாரம் மீதான உலக மாநாடு (WOSA- World Summit on Accreditation) மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தால் தொடங்கி வைக்கப்பட்டது.
- இம்மாநாடு தேசிய அங்கீகாரக் குழுவினால் (NBA - National Board of Accreditation) நடத்தப்பட்டது.
- இம்மாநாட்டின் கருத்துருவானது, “விளைவுகளின் அடிப்படையிலான சவால்கள் மற்றும் வாய்ப்புகள்” என்பதாகும். இதன் துணை கருத்துருக்கள் பின்வருமாறு:
- கற்றல் மூலம் சாதித்துக் காட்டுதல்
- தொழில்நுட்பக் கல்வியில் தொழிற்சாலையின் பங்கு
- உயர் கல்வி நிறுவனங்களை மதிப்பிடுதல் மற்றும் தர வரிசைப்படுத்துதல் - அவர்கள் தர மேம்பாட்டில் பங்கு வகிக்கிறார்களா?
- தரத்தை அரசு நிதியுடன் தொடர்புபடுத்துதல்
- பரந்த எல்லைப் பரப்புகளின் அங்கீகாரத்தில் தகவல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துதல்.
Post Views:
649