டைம்ஸ் டிராவல் நிறுவனமானது அங்கோர் வாட் கோயிலைப் புகைப்படம் எடுக்க மிகவும் ஏற்ற ஆசியாவின் மிகவும் சிறந்த யுனெஸ்கோ உலகப் பாரம்பரியத் தளமாக அறிவிக்கப் பட்டுள்ளது.
இந்தப் பட்டியலில் உள்ள மற்ற உலகப் பாரம்பரியத் தளங்களில் இந்தியாவின் தாஜ் மஹால்; விஜயநகரப் பேரரசின் ஹம்பி; பெய்ஜிங்கில் உள்ள சீனப் பெருஞ்சுவர் மற்றும் பல தளங்கள் அடங்கும்.
2024 ஆம் ஆண்டின் முதல் எட்டு மாதங்களில் அங்கோர் வாட்டிற்கு 651,857 சர்வதேசப் பார்வையாளர்கள் வருகை தந்தனர்.
12 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் கட்டமைக்கப்பட்ட இது உலகின் மிகப்பெரிய மத நினைவுச் சின்னமாகும்.
1992 ஆம் ஆண்டில், இது யுனெஸ்கோ உலகப் பாரம்பரியத் தளமாக அங்கீகரிக்கப் பட்டது.