எண்ணெய் உற்பத்தி ஒதுக்கீடு தொடர்பான சர்ச்சையின் காரணமாக, பெட்ரோலிய ஏற்றுமதி நாடுகள் அமைப்பின் தனது 16 ஆண்டுகால உறுப்பினர் அந்தஸ்தில் இருந்து வெளியேறுவதாக அங்கோலா அறிவித்துள்ளது.
நாட்டின் குறைந்து வரும் உற்பத்தி திறனைப் பிரதிபலிக்கச் செய்யும் வகையில் இந்த கூட்டமைப்பு தலைவர்களால் விதிக்கப்பட்ட குறைக்கப்பட்ட உற்பத்தி வரம்பை அந்த நாடு நிராகரித்தது.
அங்கோலாவின் இந்த நடவடிக்கையானது, பெட்ரோலிய ஏற்றுமதி நாடுகள் கூட்டு அமைப்பின் உறுப்பினர் எண்ணிக்கையை 12 ஆகக் குறைக்கும்.