TNPSC Thervupettagam

அசாதாரண நைட்ரஜன் - 9 உட்கரு

December 28 , 2023 205 days 221 0
  • நிலையாக பிணைத்திருக்கக்கூடியதை விட ஐந்து கூடுதல் புரோட்டான்களைக் கொண்டுள்ள அதி-அரிய நைட்ரஜன் வடிவத்தின் முதல் தோற்றத்தினை அறிவியலாளர்கள் பதிவு செய்துள்ளனர்.
  • நைட்ரஜன்-9 எனப்படும் புதிய ஐசோடோப்பின் நிலையை அறிவியலாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
  • நைட்ரஜன்-9 ஐசோடோப்பின் அணுக்கள் ஏழு புரோட்டான்கள் மற்றும் இரண்டு நியூட்ரான்களால் வகைப்படுத்தப்படுகின்ற நிலையில் – இது வழக்கத்திற்கு மாறாக அமைந்த அதிக எண்ணிக்கையிலான புரோட்டான் மற்றும் நியூட்ரான் விகிதமாகும்.
  • பொதுவாக, நைட்ரஜன் ஏழு புரோட்டான்கள் மற்றும் ஏழு நியூட்ரான்களுடன் நைட்ரஜன்-14 ஐசோடோப்பாக இருக்கும்.
  • இந்த ஏற்றத்தாழ்வு ஆனது ஐசோடோப்பின் நிலைத்தன்மையின் மீது ஒரு முக்கியமான விளைவைக் கொண்டிருக்கிறது என்பதோடு இது அதன் சிதைவு செயல் முறைகள் மற்றும் ஒட்டுமொத்தச் செயல்பாட்டினையும் பாதிக்கிறது.
  • அதிக புரோட்டான் உள்ளடக்கம் ஆனது நைட்ரஜன்-9 அணுக்களை வழக்கமான நிலைத் தன்மை வரம்புகளுக்கு அப்பால் கொண்டு செல்கிறது .
  • மொத்தம் 118 தனிமங்கள் உள்ள நிலையில் அதில் ஒவ்வொரு தனிமமும் வெவ்வேறு எண்ணிக்கையிலான எலக்ட்ரான்கள், புரோட்டான்கள் மற்றும் நியூட்ரான்களின் அணுக்களால் தனித்துவமானது.
  • ஐசோடோப்புகள் நியூட்ரான்களின் எண்ணிக்கையில் மட்டும் மாறுபடுகின்ற, கொடுக்கப்பட்ட ஒரு தனிமத்தின் அணுக்கள் ஆகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்