TNPSC Thervupettagam

அசாமின் சாராய்டியோ மொய்டம்கள்

January 27 , 2023 540 days 306 0
  • யுனெஸ்கோ உலகப் பாரம்பரிய மையத்திற்கு அஸ்ஸாமில் உள்ள சாராய்டியோ மொய்டம்களைப் பரிந்துரைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
  • இது தேர்ந்தெடுக்கப் பட்டால், காசிரங்கா தேசியப் பூங்கா மற்றும் மனாஸ் தேசியப் பூங்காவுடன் சேர்த்து அஸ்ஸாம் மூன்று உலகப் பாரம்பரிய தளங்களைக் கொண்டு இருக்கும்.
  • ஆனால் வடகிழக்கு இந்தியாவில் கலாச்சாரப் பாரம்பரியம் என்ற பிரிவில் தற்போது உலகப் பாரம்பரிய தளம் ஏதும் இல்லை.
  • அஸ்ஸாமில் உள்ள தை அஹோம் சமூகத்தின் பிற்பகுதியில் உள்ள மேட்டில் புதைக்கும் இடைக்காலப் பாரம்பரியத்தை சாராய்டியோ மொய்டம்கள் குறிக்கிறது.
  • இதுவரை ஆய்வு செய்யப்பட்ட 386 மைடம்கள் அல்லது மொய்டம்களில், சாராய்டியோவில் உள்ள 90 அரசப் புதைகுழிகள் சிறப்பாகப் பாதுகாக்கப்பட்டுள்ளன.
  • தற்போதைய நிலவரப்படி, அந்த அரசப் புதைகுழிகளில் 30 மட்டுமே இந்திய அரசின் தொல்லியல் துறையின் பாதுகாப்பில் உள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்