இந்தியாவின் 43வது உலகப் பாரம்பரிய தளமாக அசாமின் மொய்தாம் பகுதி சேர்க்கப் பட்டுள்ளது.
இவை கி.பி 1228 முதல் 1826 ஆம் ஆண்டு வரை அசாம் மற்றும் வடகிழக்கின் பெரும் பகுதியை ஆண்ட அஹோம் வம்சத்தின் அரச கல்லறைகள் ஆகும்.
மொய்தாம் என்பது அஹோம் அரசக் குடும்பம் மற்றும் பிரபுத்துவத்தின் கல்லறையின் மேல் எழுப்பப்பட்ட ஒரு மண் மேடு ஆகும்.
அஹோம் மன்னர்கள் அவர்களின் 600 ஆண்டுகால வரலாற்றில் பலமுறை தங்களது தலைநகரங்களை மாற்றியுள்ளனர்.
சரைடியோ நகரானது மன்னர் சுகபாவால் கி.பி 1253 ஆம் ஆண்டில் அவர்களின் முதல் தலைநகரமாக நிறுவப்பட்டது.
1856 ஆம் ஆண்டில் சுகபா சரைடியோவில் அடக்கம் செய்யப்பட்ட பிறகு, அதைத் தொடர்ந்து வந்த அரச குடும்பத்தாரும் தங்களை அடக்கம் செய்வதற்கான இடமாகத் தேர்ந்தெடுத்தனர்.
இந்தப் பகுதியில் 150க்கும் மேற்பட்ட மொய்தாம்கள் இருந்தாலும் 30 மட்டுமே இந்தியத் தொல்லியல் துறையால் பாதுகாக்கப் படுகின்றன.
மொய்தாம்கள் தற்போது இந்தப் பட்டியலில் சேர்க்கப் பட்டதைத் தொடர்ந்து அதிக எண்ணிக்கையிலான உலகப் பாரம்பரியச் சொத்துக்களைக் கொண்ட நாடுகளின் பட்டியலில் இந்தியா 6வது இடத்திற்கு முன்னேறியுள்ளது.