TNPSC Thervupettagam

அசாமில் இரண்டு பட்டுத் திட்டங்கள்

February 25 , 2019 1973 days 544 0
  • மத்திய மந்திரி ஸ்மிரிதி இரானி அசாமின் உதல்குரி மாவட்டத்தில் மத்திய ஜவுளித் துறை அமைச்சகத்தின் கீழ் இரண்டு திட்டங்களைத் துவங்கி வைத்தார்.
  • இத்திட்டம் எரி என்ற வகையின் பட்டு சாகுபடியின் மூலம் வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள மக்களின் பொருளாதாரத்தை உயர்த்துவதற்கு எண்ணுகின்றது.
மண்ணிலிருந்து பட்டு என்ற திட்டம்
  • இத்திட்டம் 100 ஹெக்டேர்களில் புதிய எரி என்ற வகை பட்டு வளர்ப்பைத் திட்டமிடுகின்றது. மேலும் இது பட்டுப்பூச்சி வளர்ப்பிற்கு பிந்தைய நடவடிக்கைகளான பட்டு வளர்ப்பு, நூற்பு மற்றும் சுழற்பு போன்ற விவசாயத் துறை நடவடிக்கைகளை மேம்படுத்துகின்றது.
எரி பட்டுநூற்புத் தொழிற்சாலை
  • மத்திய பட்டு வாரியத்தின் ஒத்துழைப்புடன் இது நேரடியாக மாநில அரசால் நிறைவேற்றப்படும்.
  • எரி பட்டு மேம்பாட்டுத் திட்டம், கோக்ராஜ்ஹாரில் மரவள்ளிக் கிழங்கு சாகுபடியின் மூலம் போடோலாந்து பிராந்தியக் குழுவின் பெண்களுக்கான நீடித்த வாழ்வாதார மேம்பாட்டிற்காக அர்ப்பணிக்கப்பட்டு இருக்கின்றது.
  • இத்திட்டத்தின் நோக்கம் மரவள்ளிக் கிழங்கு சாகுபடியைக் கீழ்க்கண்ட இரு வகையான பயன்களுக்காக உபயோகப்படுத்திக் கொள்வதாகும். அவையாவன
    • வறுமைக் கோட்டிற்கு கீழுள்ள பழங்குடியின குடும்பங்களுக்கான மேம்பாட்டிற்காக இக்கிழங்கு உணவிற்காகவும் அதன் இலை வகைகள் எரி என்ற பட்டுப் புழுக்காகவும் பயன்படுத்திக் கொள்ளப் படுதல்.
    • பட்டு வளர்ப்பு மற்றும் பட்டு நூற்புத் துறைக்காகவும் எரி வகை பட்டுப்புழுவின் சிறந்த நன்மைக்காகவும் கிடைக்கக்கூடிய இயற்கை வளங்களைப் பயன்படுத்திக் கொள்தல்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்