TNPSC Thervupettagam

அசாமில் காண்டாமிருகம் மீண்டும் அறிமுகம்

June 18 , 2022 764 days 447 0
  • 14வது அசாம் காண்டாமிருக மதிப்பீட்டின்படி, மனாஸ் தேசியப் பூங்காவில் உள்ள காண்டா மிருகங்கள் அதிக ஆயுட்காலம் கொண்டவையாக உள்ளன.
  • இருப்பினும், அவற்றிற்கு இடமாற்ற வசதி மிகவும் அவசியமாகும்.
  • காண்டாமிருகக் கணக்கெடுப்பு ஆனது ‘மொத்த எண்ணிக்கை அல்லது நேரடி எண்ணிக்கை முறை’ மூலம் மேற்கொள்ளப்பட்டது.
  • பூடான் எல்லையில் உள்ள மனாஸ் தேசியப் பூங்காவின் மேற்குப் பகுதியில் உள்ள ஒற்றைக் கொம்பு காண்டாமிருகங்கள் அதிக ஆயுட்காலம் கொண்டவை.
  • அதனால் அவற்றின் எண்ணிக்கையில் குறிப்பிடத்தக்க வளர்ச்சி ஏற்பட்டுள்ளது.
  • ஆனால் இந்தியாவில் அமைந்துள்ள பூங்காவின் பகுதியில் எண்ணிக்கையைத் தக்க வைக்கும் அளவிற்கு இளம் வயது  மற்றும் குட்டிகளின் எண்ணிக்கை இல்லை.
  • எனவே, அவற்றிற்கு ஈடாக இடமாற்றம் தேவைப்படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்