TNPSC Thervupettagam

அசாமில் தொகுதி மறுசீரமைப்பு

July 1 , 2023 385 days 328 0
  • தேர்தல் ஆணையம் (EC) ஆனது அசாம் மாநிலத்திற்கான தொகுதி மறுசீரமைப்பு ஆவணத்தை வெளியிட்டுள்ளது.
  • இது மாநிலத்தின் பல மக்களவை மற்றும் சட்டமன்றத் தொகுதிகளின் எல்லைகளில் மாற்றத்தை மேற்கொள்ள உள்ளதாக அறிவித்துள்ளது.
  • 2001 ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் அடிப்படையில் தொகுதி மறு சீரமைப்புப் பணிகளானது மேற்கொள்ளப்பட்டது.
  • அசாம் மாநிலத்தில் கடைசியாக 1976 ஆம் ஆண்டில் தொகுதி மறுசீரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டது.
  • அம்மாநிலத்தின் சராசரி மக்கள் தொகை அடர்த்தியானது, ஒரு சதுர கிலோ மீட்டருக்கு 338 பேர் ஆகும்.
  • அசாம் மாநிலத்தில் உள்ள 126 சட்டமன்றத் தொகுதிகள், 14 மக்களவைத் தொகுதிகள் என்ற எண்ணிக்கையில் எதுவும் மாற்றப் படவில்லை.
  • தற்போது 8 ஆக உள்ள பட்டியலிடப்பட்ட சாதியினருக்கான சட்டமன்றத் தொகுதிகளின் எண்ணிக்கையானது ஒன்பதாகவும், 16 ஆக உள்ள பட்டியலிடப்பட்டப் பழங்குடிச் சமூகத்தினருக்கானச் சட்டமன்றத் தொகுதிகளின் எண்ணிக்கையானது 19 ஆகவும் அதிகரிக்கப் பட உள்ளது.
  • காசிரங்கா பெயரில் ஒரு நாடாளுமன்றத் தொகுதியும் முன்மொழியப்பட்டுள்ளது.
  • பட்டியலிடப்பட்டப் பழங்குடியினருக்கு 19 சட்டசபை இடங்களும் மற்றும் இரண்டு நாடாளுமன்ற இடங்களும், பட்டியலிடப்பட்டச் சாதியினருக்கு ஒன்பது சட்டசபை இடங்களும் மற்றும் ஒரு நாடாளுமன்ற இடத்தினையும் ஒதுக்கீடு செய்வதற்கு முன் மொழியப் பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்