TNPSC Thervupettagam

அசாம்-அருணாச்சலப் பிரதேச எல்லைப் பிரச்சனை தொடர்பான ஒப்பந்தம்

April 29 , 2023 448 days 212 0
  • அசாம் மற்றும் அருணாச்சலப் பிரதேசம் ஆகிய மாநிலங்களுக்கு இடையேயான 51 ஆண்டு கால எல்லைப் பிரச்சினையை முடிவுக்குக் கொண்டு வரச் செய்வதற்கான ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் (MoU) இரு மாநிலங்களும் கையெழுத்திட்டுள்ளன.
  • அருணாச்சலப் பிரதேசத்தின் 12 மாவட்டங்களிலும், அசாமின் 8 மாவட்டங்களிலும் பரவி உள்ள 123 கிராமங்கள் தொடர்பாக இரு மாநிலங்களுக்கு இடையிலும் சர்ச்சை நிலவி வந்தது.
  • 1972 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வந்த இந்த சர்ச்சை நிரந்தரமாக தீர்க்கப்பட்டது.
  • இந்த ஒப்பந்தத்தின் கீழ், சர்ச்சைக்குரிய இந்த 123 கிராமங்கள் தொடர்பாக தற்போது மேற்கொள்ளப்பட்டுள்ள இந்த ஒப்பந்தம் இறுதியானது என்று இந்த இரு மாநிலங்களும் ஒப்புக் கொண்டுள்ளன.
  • மேலும், எதிர்காலத்தில் எந்த ஒரு பகுதி அல்லது கிராமம் தொடர்பான புதிய உரிமைக் கோரல்களை இரு மாநிலங்களும் மேற்கொள்ளாது எனவும் ஒப்புக் கொண்டுள்ளன.
  • அசாம் மற்றும் அருணாச்சலப் பிரதேசம் ஆகிய மாநிலங்கள் 804.1 கி.மீ. நீளம் கொண்ட ஒரு எல்லையைப் பகிர்ந்து கொள்கின்றன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்