TNPSC Thervupettagam

அசினெட்டோபாக்டர் பாமன்னிக்கான நுண்ணுயிர் எதிர்ப்பு மருந்து

May 31 , 2023 546 days 281 0
  • செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தி குறிப்பாகப் பெருமளவில் ஒரு அச்சுறுத்தலை ஏற்படுத்துகின்ற மருந்து-எதிர்ப்புப் பாக்டீரியாவுக்கு எதிராக செயல்படும் புதிய வகை நுண்ணுயிர் எதிர்ப்பு மருந்து ஒன்றை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
  • இந்த மருந்து அசினெட்டோபாக்டர் பாமன்னி பாக்டீரியாவின் பாதிப்புகளை எதிர்த்துப் போராட உதவும்.
  • இது பெரும்பாலும் மருத்துவமனைகளில் காணப்படுகின்ற மற்றும் நிமோனியா, மூளைக் காய்ச்சல் மற்றும் பிற தீவிர நோய்த் தொற்றுகளுக்கு வழி வகுக்குகின்ற ஒரு வகை பாக்டீரியா ஆகும்.
  • சில காயம்பட்ட வீரர்களின் உடலில் தொற்று ஏற்படுவதற்கும் இதே பாக்டீரியா தான் காரணமாகும்.
  • நுண்ணுயிர் எதிர்ப்பு மருந்திற்கான எதிர்ப்புத் திறனைக் கொண்ட அசினெட்டோ பாக்டர் பாமன்னியின் 41 வெவ்வேறு வடிவங்களுக்கு எதிராக இந்த நுண்ணுயிர் எதிர்ப்பு மருந்து செலுத்தப்பட்டுச் சோதனை செய்யப்பட்டன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்