அசோலா பாட்டி வனவிலங்குச் சரணாலயத்தில் சிறுத்தைகள்
October 16 , 2022
644 days
306
- டெல்லியின் அசோலா பாட்டி வனவிலங்குச் சரணாலயத்தில் 1940 ஆம் ஆண்டிற்குப் பிறகு முதன்முறையாக சிறுத்தைகள் தென்பட்டன.
- அசோலா பாட்டி வனவிலங்குச் சரணாலயத்தில் 8 சிறுத்தைகள் கண்டறியப்பட்டன.
- இந்த சரணாலயத்தில் 1940 ஆம் ஆண்டு முதல் சிறுத்தைகள் இருந்ததாக பதிவு செய்யப் படவில்லை.
- அசோலா பாட்டி வனவிலங்குச் சரணாலயம், ஆரவல்லி மலைத்தொடரின் தெற்கு டெல்லி மலைமுகட்டுப் பகுதியில் ஹரியானா மற்றும் டெல்லி மாநில எல்லையில் அமைந்துள்ளது.
- இது தெற்கு டெல்லி மற்றும் ஹரியானாவின் ஃபரிதாபாத் மற்றும் குருகிராம் மாவட்டங்களின் வடக்குப் பகுதிகள் முழுவதும் பரவியுள்ளது.
- இது வடக்கு ஆரவல்லி சிறுத்தை வனவிலங்கு வழித்தடத்தின் ஒரு பகுதியாகும்.
![](https://www.tnpscthervupettagam.com/assets/home/media/general/original_image/16-634.jpg)
Post Views:
306