2024 ஆம் ஆண்டில் 95 நிறுவனங்கள் தரவுத் திருட்டுக்குப் பலியாகியுள்ளதையடுத்து, உலகளவில் இணையவெளிக் குற்றத் தாக்குதல்களுக்கு மிக அதிகம் இலக்காக குறி வைக்கப் படும் இரண்டாவது நாடாக இந்தியா உருவெடுத்துள்ளது.
140 தாக்குதல்களுடன் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது.
தற்போதைய புவிசார் அரசியல் பதட்டங்கள் காரணமாக சுமார் 57 தாக்குதல்களுடன் இஸ்ரேல் மூன்றாவது இடத்தில் உள்ளது.
ஹை-டெக் குழுமத்திடமிருந்து 850 மில்லியன் இந்தியக் குடிமக்களின் தரவுகள், ஸ்டார் ஹெல்த் மற்றும் அலைடு இன்சூரன்ஸ் பெரு நிறுவனத்தின் வாடிக்கையாளர் தரவுகள் மற்றும் டெலிகம்யூனிகேஷன்ஸ் இந்தியா நிறுவனத்திடமிருந்து சுமார் 2TB அளவிலான முக்கியத் தகவல்கள் கசிவு ஆகியவை முக்கிய விதி மீறல்களில் அடங்கும்.