TNPSC Thervupettagam

அச்சுறுத்தல் நிலையில் உள்ள உயிரினங்களின் பட்டியல்

December 16 , 2022 583 days 472 0
  • கனடாவின் மாண்ட்ரீயல் நகரில் நடைபெற்ற உயிரியல் பன்முகத்தன்மைத் தொடர்பான ஐக்கிய நாடுகளின் உடன்படிக்கையின் (CBD) 15வது பங்குதாரர்கள் மாநாட்டில் அச்சுறுத்தல் நிலையில் உள்ள உயிரினங்களின் பட்டியல் வெளியிடப் பட்டது.
  • அதிகப்படியான நுகர்வு மற்றும் அதிகளவில் நிலையான முறையில் மேற்கொள்ளப் பட்டு வரும் உயிரின நீக்கமானது நம்மைச் சுற்றியுள்ள தாவரங்கள் மற்றும் விலங்குகள் மீது என்ன தாக்கத்தினை ஏற்படுத்தும் என்பதை இந்தப் பட்டியல் உணர்த்துகிறது.
  • அனைத்து வகை அபலோன் மட்டி மீன் இனங்களில் கிட்டத்தட்ட 44 சதவீத இனமானது தற்போது அழிந்து போகும் நிலையில் உள்ளது.
  • கிழக்கு ஆப்பிரிக்க நாடுகள் மற்றும் நியூ கலிடோனியாவில் உள்ள கடல் பசு இனங்கள் IUCN அமைப்பின் செந்நிறப் பட்டியலில் முறையே மிக அருகி வரும் மற்றும் அருகி வரும் நிலையில் உள்ள இனங்களாக உள்ளன.
  • இந்த இனங்கள் உலகளவில் பாதிக்கப்படக் கூடிய நிலையிலேயே உள்ளன.
  • IUCN அமைப்பின் செந்நிறப் பட்டியலில் பாதிக்கப்படக் கூடிய இனமாக இருந்த, யுகடன் தீபகற்பம் மற்றும் புளோரிடாவில் இருந்து டிரினிடாட் மற்றும் டொபாகோ வரையிலான கரீபியன் பகுதிகள் முழுவதும் காணப்படும் தூண் பவளப் பாறைகள் ஆனது மிக அருகி வரும் இனங்கள் என்ற நிலையை எட்டியுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்