TNPSC Thervupettagam

அச்சுறுத்தல் நிலையில் உள்ள பனிப்பாறைகள்

November 18 , 2022 611 days 266 0
  • யுனெஸ்கோ அமைப்பின் ஆய்வின்படி, யுனெஸ்கோ அமைப்பின் உலகப் பாரம்பரியப் பட்டியலில் உள்ள பனிப்பாறைகளில் மூன்றில் ஒரு பங்கு அச்சுறுத்தல் நிலைக்கு உள்ளாகியுள்ளது.
  • இந்தப் பனிப்பாறைகள் ஆனது, CO2 உமிழ்வுகள் காரணமாக ஏற்படும் வெப்ப மயமாதலுக்கு இட்டுச் செல்லும் வெப்ப நிலையினால் 2000 ஆம் ஆண்டிலிருந்து துரிதமான வேகத்தில் உருகி வருகின்றது.
  • யுனெஸ்கோ அமைப்பின் உலகப் பாரம்பரியத் தளங்களில், பூமியின் மொத்த பனிப் பாறைகளில், கிட்டத்தட்ட 10% அளவில் 50 பனிப்பாறைகள் உள்ளன.
  • அவற்றுள் மிக உயர்ந்த (எவரெஸ்ட் சிகரத்திற்கு அடுத்த நிலையில் உள்ள), மிக நீளமான (அலாஸ்காவில் உள்ள) மற்றும் ஆப்பிரிக்காவில் கடைசியாக மீதமுள்ள பனிப் பாறைகள் ஆகியவை அடங்கும்.
  • யுனெஸ்கோ அமைப்பின் இந்த ஆய்வானது சர்வதேச இயற்கைப் பாதுகாப்பு ஒன்றியத்துடன் (IUCN) கூட்டுறவைக் கொண்டு மேற்கொள்ளப் பட்டது.
  • அவை தற்போது ஒவ்வோர் ஆண்டும் 58 பில்லியன் டன் பனியை இழந்து வருகின்றன.
  • இது பிரான்சு மற்றும் ஸ்பெயின் ஆகிய நாடுகளின் ஒருங்கிணைந்த வருடாந்திரத் தண்ணீர் பயன்பாட்டிற்குச் சமமாகும்.
  • உலகளாவியக் கடல் மட்ட உயர்விற்குக் கிட்டத்தட்ட 5% காரணம் இவையாகும்.
  • ஆப்பிரிக்கா, ஆசியா, ஐரோப்பா, லத்தீன் அமெரிக்கா, வடக்கு அமெரிக்கா மற்றும் ஓசியானியா ஆகிய நாடுகளில் காணப்படும் பனிப்பாறைகள் அச்சுறுத்தல் நிலைக்கு உள்ளாகியுள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்