TNPSC Thervupettagam

அச்சுறுத்தல் நிலையில் வாள் சுறாக்கள்

October 18 , 2017 2595 days 855 0
  • முதல் சர்வதேச வாள்சுறா தினம் உலகம் முழுவதும் அக்டோபர் 17ஆம் தேதி கொண்டாடப்பட்டது.
  • யானைகள் மற்றும் புலிகளைக் காட்டிலும் வாள்சுறாக்கள் மிகவும் அச்சுறுத்தப்பட்ட நிலையில் இருப்பதாக கடல்சார் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
  • வாள்சுறா இந்திய வனவிலங்கு பாதுகாப்புச் சட்டம் 1972ன் அட்டவணை I-ல் சேர்க்கப்பட்டுள்ளது.
  • வாள்சுறாவின் எலும்புக்கூட்டமைப்பு எலும்புகளால் அமையாமல் குறுத்தெலும்புகளால் ஆனது. இதனால் இவை எலாஸ்மோபிரான்ச் எனும் துணைவகுப்பைச் (Elasmobranchs) சேர்ந்தவை.
  • சுறா வகைகளோடு மிக நெருங்கிய தொடர்பையும், அவற்றை போன்ற உடலமைவையும் கொண்டுள்ளதால் இவை தட்டை சுறாக்கள் எனவும் அழைக்கப்படும்.
  • இந்தியாவில் மிகவும் அருகிவரும் மீன் இனமாக வாள்சுறாக்கள் இருக்கக்கூடும் என மத்திய கடல் மீன் வள ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது. (Central Marine Fisheries Research Institute-Kochi).
  • இதுவரை 5 வாள்சுறா இனங்கள் மட்டுமே கண்டறியப்பட்டுள்ளது. அவையாவன -குட்டை வாள்சுறா, சிறுபல் வாள்சுறா, பெரும்பல் வாள்சுறா, பச்சை வாள்சுறா, கத்திபல் வாள்சுறா.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்