முதல் சர்வதேச வாள்சுறா தினம் உலகம் முழுவதும் அக்டோபர் 17ஆம் தேதி கொண்டாடப்பட்டது.
யானைகள் மற்றும் புலிகளைக் காட்டிலும் வாள்சுறாக்கள் மிகவும் அச்சுறுத்தப்பட்ட நிலையில் இருப்பதாக கடல்சார் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
வாள்சுறா இந்திய வனவிலங்கு பாதுகாப்புச் சட்டம் 1972ன் அட்டவணை I-ல் சேர்க்கப்பட்டுள்ளது.
வாள்சுறாவின் எலும்புக்கூட்டமைப்பு எலும்புகளால் அமையாமல் குறுத்தெலும்புகளால் ஆனது. இதனால் இவை எலாஸ்மோபிரான்ச் எனும் துணைவகுப்பைச் (Elasmobranchs) சேர்ந்தவை.
சுறா வகைகளோடு மிக நெருங்கிய தொடர்பையும், அவற்றை போன்ற உடலமைவையும் கொண்டுள்ளதால் இவை தட்டை சுறாக்கள் எனவும் அழைக்கப்படும்.
இந்தியாவில் மிகவும் அருகிவரும் மீன் இனமாக வாள்சுறாக்கள் இருக்கக்கூடும் என மத்திய கடல் மீன் வள ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது. (Central Marine Fisheries Research Institute-Kochi).
இதுவரை 5 வாள்சுறா இனங்கள் மட்டுமே கண்டறியப்பட்டுள்ளது. அவையாவன -குட்டை வாள்சுறா, சிறுபல் வாள்சுறா, பெரும்பல் வாள்சுறா, பச்சை வாள்சுறா, கத்திபல் வாள்சுறா.