நேபாளத்தின் தெற்குச் சமவெளிப் பகுதியில் கட்டப்பட்டுவரும் முதல் கட்ட அஞ்சல் நெடுஞ்சாலைத் திட்டத்திற்கு கூடுதலாக ரூ.470 மில்லியன் (நேபாளி பணத்தை) இந்தியா வழங்கியுள்ளது.
ஹலக்கி ராஜ் மார்க் என்று அழைக்கப்படும் இச்சாலை நேபாளத்தின் தராய் பகுதியின் குறுக்காக கிழக்கில் பத்ரப்பூரிலிருந்து மேற்கே தோத்தாரா வரை நாட்டின் முழு அகலத்தை இரண்டாகப் பிரிக்கிறது.
நேபாளத்தின் பழமையான நெடுஞ்சாலையான இது அனைத்து இமயமலைப் பகுதி நாடுகளின் போக்குவரத்து, அஞ்சல் சேவைகளை எளிதாக்குகிறது.
இத்திட்டத்தின் முதல் தொகுப்பானது ஏற்கனவே முடிக்கப்பட்டு ஜனவரி 2017ல் சேவைக்கு திறக்கப்பட்ட தங்காதி – பஜானியா – சத்தி மற்றும் லக்மி திக்காபூர் – காக்ராவ்லா ஆகிய இரண்டு சாலைப் பிரிவுகளை உள்ளடக்கியது.