TNPSC Thervupettagam

அடல் புத்தாக்கத் திட்டம்

March 29 , 2018 2436 days 4731 0
  • இந்தியா முழுவதும் உள்ள 100 அடல் மேம்படுத்து ஆய்வகங்களில் (Atal Tinkering Labs) புத்தாக்கம் மற்றும் தொழில்முனைவு கலாச்சாரத்தை மேம்படுத்துவதற்காக ஜெர்மன் நாட்டின் தொழில்நுட்ப நிறுவனமான  SAP உடன் நோக்க அறிக்கை (Statement of Intent)  ஒன்றை நிதி ஆயோக்கின் அடல் புத்தாக்க திட்ட அமைப்பு கையெழுத்திட்டுள்ளது.
  • இந்தியா முழுவதும் உயர்நிலைப் பள்ளிக் குழந்தைகளிடையே அறிவியல், தொழில் நுட்பம், பொறியியல் மற்றும் கணிதம் (Science, Technology, Engineering and Mathematics - STEM) ஆகியவற்றின் கற்றலை வளர்ப்பதற்காக 100 அடல்  மேம்படுத்து ஆய்வகங்களை  ஐந்தாண்டுக் காலத்திற்கு     SAP பேணி செயல்படுத்தும்.

அடல் புத்தாக்க திட்டத்தைப் பற்றி

  • நிதி ஆயோக்கின் அடல் புத்தாக்கத் திட்டமானது (Atal Innovation Mission) நாட்டில் புத்தாக்கம் (Innovation) மற்றும் தொழில்முனைவு (Entrepreneurship) கலாச்சாரத்தை ஊக்குவிப்பதற்காக கொண்டு வரப்பட்ட அரசினுடைய முக்கியமானத் திட்டங்களில் ஒன்றாகும்.
  • புத்தாக்க சூழலமைப்பை (Innovation eco-system) புரட்சிகரப்படுத்துவதும், நாட்டினுடைய புத்தாக்க சூழலமைவை மேற்பார்வையிடுவதற்கு ஓர் மேற்குடை அமைப்பை ஏற்படுத்துவதும் இதன் கட்டாயப் பணிகளாகும்.
  • இதற்காக நாடு முழுவதும் அடல் மேம்படுத்து ஆய்வகங்கள் (Atal Tinkering Labs) அமைக்கப்பட்டுள்ளன.
  • நாட்டில் தொழில்முனைவுப் போக்கின் ஊக்குவிப்பிற்கு ஓர் வினையூக்கியாகவும், புத்தாக்க சூழலுக்கு கணிசமான ஊக்கம் அளிப்பதற்காகவும் இத்திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
  • ஒவ்வொரு மாவட்டங்களிலும், முன்மொழியப்பட்டுள்ள இந்திய பொலிவுறு நகரங்களிலும் (Smart City) குறைந்தபட்சம் ஒரு அடல் மேம்படுத்து ஆய்வகம் அமைக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்