TNPSC Thervupettagam

அடல் பூஜல் யோஜனா

February 18 , 2018 2345 days 1508 0
  • நிலத்தடி நீர்மட்டக் குறைவை கையாளுவதற்காக மத்திய அரசு அடல் பூஜல் யோஜனா (Atal Bhujal Yojana) எனும் திட்டத்தை வகுத்துள்ளது.
  • மத்திய நீர்வள, நதி மேம்பாடு மற்றும் கங்கை புனரமைப்பு அமைச்சகத்தின் (Ministry of Water Resources, River Development & Ganga Rejuvenation ) கீழ் ஏற்படுத்தப்பட உள்ள இத்திட்டமானது கேபினேட் குழுவின் இசைவிற்காக காத்திருப்பில் உள்ளது.
  • நிலத்தடி நீர் மட்டத்தை மீள்நிரப்புதலும் (Recharge), வேளாண்சார் நடவடிக்கைகளுக்கு போதிய நீர் சேமிப்பு அமைப்புகளை உருவாக்குவதும் இத்திட்டத்தின் நோக்கங்களாகும்.
  • புறப்பரப்பு நீர் நிலை அமைப்புகளை புத்துயிரூட்டுவதன் மூலம் குறிப்பாக ஊரகப் பகுதிகளில் நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்துவதே இத்திட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.
  • இத்திட்டம் 5 ஆண்டு காலத்திற்கு செயல்படுத்தப்பட உள்ளது.
  • அமைச்சரவையின் அனுமதி கிட்டியவுடன், நீர் பற்றாக்குறையுடைய மாநிலங்களான குஜராத், மஹாராஷ்டிரா, ஹரியானா, கர்நாடகா, உத்திரப்பிரதேசம், மத்தியப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் இத்திட்டம் துவங்கப்பட உள்ளது.
  • நிலத்தடி நீர் மீது மத்திய அரசிற்கு எத்தகு அதிகாரமும் கிடையாது.
  • 1882ஆம் ஆண்டுச் சட்டமான இந்திய எளிமைப்பாட்டுச் சட்டம் மட்டுமே (Indian Easement Act - 1882) நிலத்தடி நீர் தொடர்பான இந்தியச் சட்டமாகும்.
  • அடல் பூஜல் யோஜனா நிலத்தடி நீர் அளிப்பு சார் மேலாண்மை (Demand side management) மீது கவனம் செலுத்துவதற்காகவும் ஏற்படுத்தப்பட்டுள்ளது..
  • குறைந்தபட்ச நீர் பயன்பாட்டின் மூலம் எப்படி நீர் தேவைகளை பூர்த்தி செய்கிறோம் என்பதே நீர் அளிப்பு சார் மேலாண்மை எனப்படும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்