மத்திய நிதி அமைச்சகமானது சிறு நிதியியல் வங்கிகள் (Small Financial Banks) மற்றும் கட்டண வங்கிகள் (payment banks) அடல் பென்ஷன் யோஜனா திட்டத்தை (Atal Pension Yojana-APY) மேற்கொள்வதற்கு அனுமதி வழங்கியுள்ளது.
அடல் பென்ஷன் திட்டத்தின் விரிவாக்கத்தை அதிகரிப்பதற்காக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அடல் பென்ஷன் திட்டத்தின் கீழ், நடப்பில் உள்ள மாதாந்திர ஓய்வூதிய தொகையின் விநியோகிப்பு வழியை (APY’s Distribution Channel) வலுப்படுத்துவதற்காகவும் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அடல் பென்ஷன் யோஜனா
அடல் பென்ஷன் யோஜனாவானது ஓர் மாதாந்திர ஓய்வூதியத் திட்டமாகும்.
இத்திட்டத்தின் கீழ், தன்னுடைய பணிக்காலத்தில் சந்தாதாரராக இணைபவர், தான் செலுத்தி வந்த பிரீமியத்தின் அடிப்படையில் தன்னுடைய 60-வது வயதிலிருந்து குறைந்தபட்ச உறுதியான ஓய்வூதியமாக மாதா மாதம் ரூ.1000-லிருந்து ரூ.5000 வரை பெறுவர்.
சந்தாதாரர் தவறினால், அவருக்கு அளிக்கப்பட வேண்டிய அதே தொகையானது, அவரின் மனைவிக்கு வழங்கப்படும்.
இவ்விருவரும் தவறினால், இவர்களினால் ஏற்கனவே குறிப்பிடப்பட்ட பிரதிவாதிக்கு (Nominee) அளிக்கப்பட வேண்டிய தொகையானது மொத்தமாக வழங்கப்படும்
அடல் பென்ஷன் திட்டமானது 2015-ஆம் ஆண்டின் ஜுன் மாதம் ஒன்றாம் தேதி செயல்பாட்டுக்கு வந்தது.
18-லிருந்து 40 வயதிற்குட்பட்ட அனைத்து இந்திய குடிமக்களும் இத்திட்டத்தில் சேரலாம்.