அடிப்படை எழுத்தறிவு மற்றும் எண்ணியல் கல்வி அறிக்கை
March 1 , 2023 635 days 395 0
பிரதமருக்கான பொருளாதார ஆலோசனைக் குழுவானது (EAC-PM) சமீபத்தில் ஓர் ஆய்வறிக்கையினை வெளியிட்டுள்ளது.
இந்த அறிக்கையானது, ஹார்வர்ட் வணிகக் கல்லூரியில் உள்ள உத்தி மற்றும் போட்டித் திறன் கல்வி நிறுவனத்தின் இந்தியப் பிரிவான போட்டித்திறன் கல்வி என்ற நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டது.
இது 10 வயதுக்குட்பட்ட குழந்தைகளிடையே நிலவும் கல்வியறிவு தரத்தின் குறிகாட்டி ஆகும்.
கல்விசார் உள்கட்டமைப்பு, கல்விக்கான அணுகல், அடிப்படை சுகாதாரம், கற்றல் மூலம் பெறும் பயன்கள் மற்றும் நிர்வாகம் போன்ற அனைத்து முக்கியக் குறி காட்டிகளிலும் பஞ்சாப் மாநிலம் முதலிடத்தில் உள்ளது.
மேற்கு வங்காளம் தனது முன்னிலையைத் தக்க வைத்துக் கொண்ட நிலையில் பெரிய மாநிலங்களின் பிரிவில் உத்தரப் பிரதேசம் கடைசி இடத்தில் உள்ளது.
சிறிய மாநிலங்களின் பிரிவில், பஞ்சாப் மாநிலம் முதலிடத்திலும் தெலுங்கானா மாநிலம் கடைசி இடத்திலும் உள்ளது.
ஒன்றியப் பிரதேசங்களின் பட்டியலில் புதுச்சேரி முதலிடத்திலும், லடாக் மோசமான செயல்திறனுடன் கடைசி இடத்திலும் உள்ளது.