அடிமை வர்த்தகம் மற்றும் அதன் ஒழித்தலை நினைவு கூறுவதற்கான சர்வதேச தினம் - ஆகஸ்ட் 23
August 24 , 2019 1922 days 678 0
ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 23 அன்று “அடிமை வர்த்தகம் மற்றும் அதன் ஒழித்தலை நினைவு கூறுவதற்கான சர்வதேச தினம்” அனுசரிக்கப் படுகின்றது.
1791 ஆம் ஆண்டில் ஆகஸ்ட் 22 ஆம் தேதியிலிருந்து ஆகஸ்ட் 23 ஆம் தேதி வரை செயின்ட் டொமினிக் தீவில் அடிமை வர்த்தகத்திற்கு எதிராக அடிமையாளர்களால் நடத்தப்பட்ட புரட்சியை அனுசரிப்பதற்காக ஆகஸ்ட் 23 என்ற தினம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.
இது அட்லாண்டிக் பெருங்கடல் அடிமை வர்த்தக ஒழிப்பில் ஒரு முக்கியக் காரணியாக இருந்தது.
இத்தினமானது முதன் முறையாக 1998 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 23 அன்று ஹைட்டியில் அனுசரிக்கப்பட்டது.