TNPSC Thervupettagam

அடிமை வர்த்தகம் மற்றும் அதை ஒழிப்பதற்கான சர்வதேச தினம் - ஆகஸ்ட் 23

August 28 , 2024 87 days 68 0
  • இந்த நாள் அடிமை வர்த்தகத்தின் அவல நிலையினை அனைத்து மக்களின் நினைவில் பதிய வைக்கும் நோக்கத்தில் அனுசரிக்கப்படுகிறது.
  • இது முதன்முதலில் பல நாடுகளில் குறிப்பாக ஹைத்தி (1998) மற்றும் செனகலில் உள்ள கோரே தீவு (1999) ஆகிய இடங்களில் கொண்டாடப்பட்டது.
  • ஆனால் இந்த நாளுக்கான சர்வதேச அங்கீகாரம் ஆனது 2016 ஆம் ஆண்டில் தான் யுனெஸ்கோ அமைப்பினால் வழங்கப்பட்டது.
  • 1833 ஆம் ஆண்டு அடிமை முறை ஒழிப்புச் சட்டம் ஆனது பிரித்தானிய பாராளுமன்றத்தினால் நிறைவேற்றப்பட்டு, 1834 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 01 ஆம் தேதியன்று அரச ஒப்புதலைப் பெற்றது.
  • 1500-1800 ஆகிய ஆண்டுகளுக்கு இடையில் சுமார் 12 மில்லியன் அடிமைகள் வேறு நாடுகளுக்கு அனுப்பப்பட்டனர்.
  • 1804 ஆம் ஆண்டில், உலகின் முதல் அடிமை முறை இல்லாத நாடாக ஹைதி மாறியது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்