TNPSC Thervupettagam

அடிமைத்தன முறைக்காக நெதர்லாந்து நாட்டின் மன்னிப்பு கோரல்

July 15 , 2023 500 days 234 0
  • 2023 ஆம் ஆண்டானது, சுரினாம் மற்றும் கரீபியனில் உள்ள டச்சு காலனிகளில் மேற் கொள்ளப் பட்டு வந்த அடிமைத்தனம் 1873 ஆம் ஆண்டில் ஒழிக்கப் பட்டதன் 150வது ஆண்டு நிறைவைக் குறிக்கிறது.
  • 16 ஆம் நூற்றாண்டில் தொடங்கி, காலனித்துவ மக்களை அடிமைப்படுத்தி வைத்திருந்த நடவடிக்கையில் தனது நாட்டின் பங்கிற்காக நெதர்லாந்தின் மன்னர் வில்லெம்-அலெக்சாண்டர் மன்னிப்பு கோரினார்.
  • மற்ற ஐரோப்பிய நாடுகளைப் போலவே டச்சுக்காரர்களும் அட்லாண்டிக் கடல் கடந்த அடிமை வர்த்தகத்தில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டனர்.
  • 1596 மற்றும் 1829 ஆகிய ஆண்டுகளுக்கு இடையில், டச்சுக்காரர்கள் சுமார் அரை மில்லியன் அளவிலான ஆப்பிரிக்கர்களை அட்லாண்டிக் கடலைக் கடந்து கொண்டு சென்று அடிமை வர்த்தகத்தில் ஈடுபட்டனர்.
  • 600,000க்கும் மேற்பட்ட மக்கள் ஆப்பிரிக்காவிலிருந்து அட்லாண்டிக் பெருங்கடலின் வழியாக டச்சு நாட்டுக் கப்பல்களில் கொண்டு செல்லப்பட்டு, அடிமைகளாக விற்கப் பட்டனர் அல்லது தோட்டப் பயிர் வளர்ப்பு நிலங்களில் வேலை செய்வதற்காக ஈடு படுத்தப் பட்டனர்.
  • சுமார் 75,000 பேர் அந்தக் கடல் பயணத்தில் உயிரிழந்தனர்.
  • 1945 மற்றும் 1949 ஆகிய ஆண்டுகளுக்கு இடையில், டச்சுக்காரர்கள் இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு இந்தோனேசியாவில் “அதிகப்படியான வன்முறையில்” ஈடுபட்டனர்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்