TNPSC Thervupettagam

அடிமைத்தனத்தை ஒழிப்பதற்கான சர்வதேச தினம் - டிசம்பர் 02

December 5 , 2024 17 days 49 0
  • இந்த நாள் அடிமைத்தனத்தின் நவீன கால வடிவங்களை ஒழிப்பது, மனிதக் கடத்தல் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துதல் மற்றும் அனைத்து தனிநபர்களின் உரிமைகள் மற்றும் கண்ணியத்தை மேம்படுத்துதல் ஆகியவற்றில் கவனம் செலுத்துகிறது.
  • 1949 ஆம் ஆண்டில் இந்த நாளில் தான், UNGA ஆனது மனிதர்களை அடிமையாக விற்கும் நடைமுறைகளை ஒடுக்கச் செய்வதற்கும் மற்றவர்களின் பாலியல் ரீதியான தொழில்முறையில் மேற்கொள்ளப்படும் பல்வேறு சுரண்டல் நடவடிக்கைகளை நன்கு ஒடுக்கச் செய்வதற்குமான ஐக்கிய நாடுகள் சபையின் உடன்படிக்கையினை ஏற்றுக் கொண்டது.
  • சர்வதேசத் தொழிலாளர் அமைப்பின் படி, 2021 ஆம் ஆண்டில் உலகளவில் சுமார் 27.6 மில்லியன் மக்கள் கட்டாய உழைப்பில் ஈடுப்பட்டுள்ளனர்.
  • 2016 முதல் 2021 ஆம் ஆண்டு வரை, இந்த எண்ணிக்கையானது பெரும்பாலும் தனியார் நிறுவனங்களின் மூலமாக பெருமளவு திணிக்கப்பட்ட கட்டாய உழைப்பு நடவடிக்கை காரணமாக 2.7 மில்லியனாக அதிகரித்துள்ளது.
  • 2023 ஆம் ஆண்டு உலகளாவிய அடிமைத்தனக் குறியீட்டின்படி, இந்தியாவில் சுமார் 11 மில்லியனுக்கும் அதிகமான அடிமைகள் உள்ளனர் என்ற நிலையில் இது எந்த ஒரு நாட்டிலும் இல்லாத அளவிலான எண்ணிக்கையாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்