அடிலாபட் டோக்ரா, வாரங்கல் துர்ரிக்கள் - புவிசார் குறியீடு
April 29 , 2018 2434 days 776 0
சென்னையில் உள்ள புவிசார் குறியீட்டு பதிவு அலுவலகமானது (Geographical Indication Registry) அடிலாபட் டோக்ரா (Adilabad dokra) மற்றும் வாரங்கல் துர்ரிகள் (Warangal Dhurries) ஆகிய தெலுங்கானாவைச் சேர்ந்த இரு கைவினைப் பொருட்களுக்கு புவிசார் குறியீட்டினை (Geographical Indication- GI) வழங்கியுள்ளது.
தெலுங்கானாவின் அடிலாபாத் மாவட்டத்தை பூர்வீக இடமாக கொண்ட வோஜ் சமுதாயத்தினரால் (Woj community) மேற்கொள்ளப்படும் ஓர் பண்டைய உலோக மணியின் கைவினை வடிவமே (Ancient bell metal craft) அடிலாபட் டோக்ரா ஆகும்.
இவர்கள் சிரோ பெர்டியூ (cire perdue) எனும் பண்டைய வார்ப்பு தொழில்நுட்பத்தை (ancient casting technique) பயன்படுத்துகின்றனர். அதாவது உலோக வார்ப்பிற்கு பின்னான மெழுகு நீக்கத் தொழில்நுட்பம் (lost wax casting technique).
வாரங்கல் துர்ரிகள் என்பவை மிகவும் பிரபலமான பாரம்பரிய தடித்த பருத்தி கம்பளிகளாகும் (cotton rug). இவற்றில் நெசவாளர்கள் அழகிய வடிவமைப்புகளை உருவாக்குவர். மேலும் தாவர எண்ணெய்களைப் பயன்படுத்தி இவற்றை சாயமிடுவர். இவற்றின் மீதான அச்சுப் பணி முடிந்த பிறகு இவற்றை ஓடும் நீரில் கழுவுவர்.