அடுத்த 10 ஆண்டுகளுக்கான இந்தியாவின் விண்வெளி செயல் திட்டம்
February 21 , 2025 6 days 48 0
இஸ்ரோ நிறுவனமானது, அடுத்த 10 ஆண்டுகளுக்கான இந்தியாவின் விண்வெளிப் திட்டப் பயணங்களின் எதிர்காலச் செயல் திட்டத்தினை வெளியிட்டுள்ளது.
இஸ்ரோவின் மிக முக்கியத் திட்டம் விண்வெளிக்கு குறைந்த செலவிலான அணுகலை மேம்படுத்துவதைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட உள்ள ககன்யான் திட்டமாகும்.
Mark III ஏவு வாகனத்தின் திறனை 25 சதவிகிதம் அதிகரிப்பதற்காக புதிய உந்துவிசை அமைப்பு கொண்டு அது நன்கு மேம்படுத்தப்படும் என்ற நிலையில் இது அதன் ஏவுதல் குறித்த செலவினங்களைக் குறைக்கிறது.
இஸ்ரோ நிறுவனம் ஆனது, திரவ ஆக்ஸிஜன் குறித்தும் மற்றும் 200 டன் எடை கொண்ட உந்து விசை இயந்திரம் ஆகியவற்றின் உருவாக்கம் குறித்தும் பணியாற்றி வருகிறது.
அடுத்த தலைமுறை நுட்பத்திலான ஏவுதல் அமைப்பு ஆனது, SLV III வாகனத்தினை விட 1,000 மடங்கு திறன் கொண்டதாக இருக்கும்.
எதிர்காலத்தில் மேற்கொள்ளப்பட உள்ள அறிவியல் ரீதியான ஆய்வுப் பயணங்களில் வெள்ளிக் கோள் ஆய்வுத் திட்டம், செவ்வாய்க் கிரக உலாவித் திட்டம், சந்திரயான்- 4 மற்றும் சந்திரயான் - 5 ஆகியவை அடங்கும்.