TNPSC Thervupettagam

அடுத்த இந்தியத் தலைமை நீதிபதி – B.R. கவாய்

April 19 , 2025 3 days 52 0
  • இந்தியத் தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணா, நீதிபதி B.R. கவாயை இந்தியாவின் 52வது தலைமை நீதிபதியாக நியமிக்க அரசுக்கு பரிந்துரைத்துள்ளார்.
  • இந்தியத் தலைமையான நீதிபதி சஞ்சீவ் கண்ணா மே 13 ஆம் தேதியன்று ஓய்வு பெற உள்ளார்.
  • 2019 ஆம் ஆண்டு மே 24 ஆம் தேதியன்று உச்ச நீதிமன்ற நீதிபதியாக பதவி உயர்வு பெற்ற இவர் 2025 ஆம் ஆண்டு நவம்பர் 23 ஆம் தேதியன்று ஓய்வு பெற உள்ளார்.
  • கவாயின் தந்தையான 'தாதாசாகேப்' என்று அறியப்பட்ட இராமகிருஷ்ணா சூர்யபன் கவாய், பீகாரின் முன்னாள் ஆளுநராக இருந்தார்.
  • இந்தியத் தலைமை நீதிபதியான KG பாலகிருஷ்ணன் (2007-2010) என்பவருக்கு அடுத்து பட்டியலினச் சமூகத்திலிருந்து இந்தியாவின் இரண்டாவது தலைமை நீதிபதியாக நீதி அரசர் BR கவாய் பதவி ஏற்க உள்ளார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்