பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனமானது (Defence Research and Development Organisation) இன்னும் முறையாகப் பெயர் சூட்டப்படாத தரையிலிருந்து வான் இலக்கை நோக்கி ஏவக்கூடிய புதிய ஏவுகணையின் முதல் சோதனையை வெற்றிகரமாக நடத்தியுள்ளது.
இந்த ஏவுகணையானது திட எரிபொருள் குழாய் உடைய ராம்ஜெட் (Solid Fuel Ducted Ramjet -SFDR) உந்துதல் தொழில்நுட்பத்தினால் ஆற்றலுட்டப்பட்டதாகும்.
இந்த SFDR தொழில்நுட்ப செயல்முறை பரிசோதனையானது ஒடிஸாவின் சந்திப்பூரில் உள்ள ஒருங்கிணைந்த சோதனை வரம்பிலிருந்து மேற்கொள்ளப்பட்டது.
இந்த SFDR தொழில்நுட்பமானது இந்தியா மற்றும் இரஷ்யாவால் இணைந்து மேம்படுத்தப்பட்டதாகும்.
SFDR தொழில்நுட்பமானது வழக்கமான திட எரிபொருள் அல்லது திரவ எரிபொருள் கொண்ட ஏவுகணைகளிலிருந்து வேறுபட்ட ஓர் உந்துதல் தொழிற்நுட்பமாகும்.