TNPSC Thervupettagam

அடுத்தத் தலைமுறை நுட்பம் சார்ந்த ஏவு வாகனம்

September 25 , 2024 2 days 64 0
  • தற்போதைய LVM3 ஏவு வாகனத்துடன் உடன் ஒப்பிடும் போது NGLV மூன்று மடங்கு அதிக அளவிலான கருவிகளை கொண்டு செல்லும் திறனை மேம்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
  • இதன் விலை 1.5 மடங்கு மட்டுமே அதிகமாக இருக்கும்.
  • மறுபயன்பாட்டு அம்சங்களை மிகவும் அதிகம் கொண்டுள்ள இந்த ஏவு வாகனமானது, விண்வெளியினை மிகவும் மலிவான செலவில் அணுகுவதை உறுதி செய்து, பசுமை நுட்பம் சார்ந்த மாதிரி உந்துவிசை மீதான அமைப்புகளின் ஒருங்கிணைப்பை உறுதி செய்யும்.
  • NGLV ஆனது, புவி தாழ்மட்டச் சுற்றுப்பாதைக்கு (LEO) அதிகபட்சமாக சுமார் 30 டன்கள் எடையுள்ள கருவிகளை சுமந்து செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது மற்றும் மீண்டும் பயன்படுத்தக்கூடிய வகையிலான முதல் கட்டப் பாகத்தினைக் கொண்டு உள்ளது.
  • தற்போது செயல்பாட்டில் உள்ள PSLV, GSLV, LVM3 மற்றும் SSLV போன்ற ஏவு வாகனங்கள் மூலம் 10 டன் எடையுள்ள செயற்கைக் கோள்களை LEO சுற்றுப்பாதைக்கும், 4 டன் புவி-ஒத்திசைவு சுற்றுப்பாதைக்கும் (GTO) கொண்டு செல்லும் நுட்பத்தில் இந்தியாவானது தன்னிறைவு அடைந்துள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்