அடையாறு ஆற்றில் மலக்குடற் பற்றுயிரிகளின் அளவு ஆனது நிர்ணயிக்கப்பட்ட ஒரு பாதுகாப்பான வரம்பை விட 10 மடங்கு அதிகமாக இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
மலக்குடற் பற்றுயிரிகள் ஆனது 100 MPN/100 மில்லி என்ற அனுமதிக்கப்பட்ட வரம்பை விட அதிகமாக - 1026 MPN/100 ml - அதிக அளவில் இருப்பதாக இந்தச் சோதனைகள் காட்டுகின்றன.
MPN என்பது மிகவும் சாத்தியமான மதிப்பீட்டு எண் ஆகும், இது தண்ணீரில் உள்ள நுண்ணுயிரிகளை அளவிடப் பயன்படும் ஒரு மதிப்பீடாகும்.
2024 ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் அடையாறு சுற்றுச்சூழல் சார் பூங்காவில் மீன்கள் உயிரிழந்த சம்பவத்திற்கு இந்த மாசுபாடு காரணமாக நம்பப் படுகிறது.
மேலும், உயிரியல் ஆக்ஸிஜன் தேவை 133 mg/l – லிட்டருக்கு எத்தனை மில்லி கிராம் (தரநிலை: 3 mg/l), வேதியிய ஆக்ஸிஜன் தேவை 136 mg/l (தரநிலை: 280 mg/l) மற்றும் மொத்த நைட்ரஜன் 57.74 mg/l (தரநிலை: 23.697 mg/l) போன்ற நிலைகளுடன் நீரின் தரத்தின் மற்ற குறிகாட்டிகளும் ஆபத்தான அளவில் உள்ளன.