TNPSC Thervupettagam

அடையாளத் திட்ட அமைப்பின் அறிக்கை

October 23 , 2017 2588 days 854 0
  • உலக வங்கியின் ID4D எனும் அடையாளத் திட்ட அமைப்பானது (Identification for development – ID4D) உலகம் முழுவதும் எந்த அடையாளப் பதிவுகளும் இன்றி சுமார்1 பில்லியன் மக்கள் வாழ்கின்றனர் என அறிக்கையை வெளியிட்டுள்ளது.
  • அதாவது உலக மக்கள் தொகையில் ஏழில் ஒருவர் தங்களது அடையாளப் பதிவை நிரூபிக்க இயலாமல் உள்ளனர்.
  • இந்த மக்கள் எந்த ஒரு கல்வி, சுகாதார வசதிகளும் இல்லாமல் உள்ளனர்.
  • அத்தகையோரில் பெரும்பாலானோர் ஆப்பிரிக்காவையும், ஆசியாவையும் சேர்ந்தவர்கள்.
  • இவர்களுள் பிறப்புகள் பதிவு செய்யப்படாத குழந்தைகளில் (18 வயதிற்கு குறைவானோர்) மூன்றில் ஒரு பங்கிற்கு அதிகமானோர் வன்முறை பாதிப்பிற்கு உள்ளாகும் நிலையில் உள்ளனர்.
  • வறுமை, பாகுபாடு, நோய்ப்பரவல், ஆயுத வன்முறை ஆகியவற்றால் பாதிக்கப்பட்ட மக்கள் வாழும் நிலவியல் பகுதிகளில் இந்தப் பிரச்சனை மிகவும் அதிகமாக காணப்படுகின்றது.
  • அத்தகைய குழந்தைகள் சட்ட விரோதமான செயல்கள் மற்றும் வன்முறைக்கு இலக்காவதாகவும், சிறுவர்கள் கட்டாயத்தொழிலுக்கும், சிறுமிகள் குழந்தை திருமணத்திற்கும் உட்படுத்தப்படுவதாகவும், யூனிசெப் அமைப்பின் 2013 ஆம் ஆண்டு அறிக்கை கூறுகிறது. அதோடு அவர்கள் ஆள் கடத்தலுக்கும் உள்ளாவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்