உலக வங்கியின் ID4D எனும் அடையாளத் திட்ட அமைப்பானது (Identification for development – ID4D) உலகம் முழுவதும் எந்த அடையாளப் பதிவுகளும் இன்றி சுமார்1 பில்லியன் மக்கள் வாழ்கின்றனர் என அறிக்கையை வெளியிட்டுள்ளது.
அதாவது உலக மக்கள் தொகையில் ஏழில் ஒருவர் தங்களது அடையாளப் பதிவை நிரூபிக்க இயலாமல் உள்ளனர்.
இந்த மக்கள் எந்த ஒரு கல்வி, சுகாதார வசதிகளும் இல்லாமல் உள்ளனர்.
இவர்களுள் பிறப்புகள் பதிவு செய்யப்படாத குழந்தைகளில் (18 வயதிற்கு குறைவானோர்) மூன்றில் ஒரு பங்கிற்கு அதிகமானோர் வன்முறை பாதிப்பிற்கு உள்ளாகும் நிலையில் உள்ளனர்.
வறுமை, பாகுபாடு, நோய்ப்பரவல், ஆயுத வன்முறை ஆகியவற்றால் பாதிக்கப்பட்ட மக்கள் வாழும் நிலவியல் பகுதிகளில் இந்தப் பிரச்சனை மிகவும் அதிகமாக காணப்படுகின்றது.
அத்தகைய குழந்தைகள் சட்ட விரோதமான செயல்கள் மற்றும் வன்முறைக்கு இலக்காவதாகவும், சிறுவர்கள் கட்டாயத்தொழிலுக்கும், சிறுமிகள் குழந்தை திருமணத்திற்கும் உட்படுத்தப்படுவதாகவும், யூனிசெப் அமைப்பின் 2013 ஆம் ஆண்டு அறிக்கை கூறுகிறது. அதோடு அவர்கள் ஆள் கடத்தலுக்கும் உள்ளாவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.