TNPSC Thervupettagam

அட்லாண்டிக் கடல் பகுதியின் அடிமைகள் வர்த்தகம் மற்றும் அடிமைத் தனத்தினால் பாதிக்கப்பட்டவர்களை நினைவு கூர்வதற்கான சர்வதேச தினம் - 25 மார்ச்

April 1 , 2018 2395 days 674 0
  • அட்லாண்டிக் கடல் பகுதியின் அடிமைகள் வர்த்தகம் மற்றும் அடிமைத் தனத்தினால் பாதிக்கப்பட்டவர்களை நினைவு கூர்வதற்கான சர்வதேச தினம் ஒவ்வொரு ஆண்டும் உலகம் முழுவதும் மார்ச் 25 அன்று கடைபிடிக்கப்படுகிறது.
  • அட்லாண்டிக் கடல் பகுதியில் அடிமைகள் கடத்தலினால் பாதிக்கப்பட்ட மற்றும் இறந்தவர்களை பெருமைப்படுத்துவதற்காகவும், நினைவு கூர்வதற்காகவும் இத்தினம் கடைபிடிக்கப்படுகிறது.
  • 2018ஆம் ஆண்டிற்கான இத்தினத்தின் கருத்துரு, “அடிமைத் தனத்தை நினைவு கூர்தல்: சுதந்திரம் மற்றும் சமத்துவத்திற்காக போராடுங்கள், வெற்றி பெறுங்கள்”.
  • ஆப்பிரிக்க வம்சாவளியைச் சேர்ந்த மக்கள் அடிமைத்தனத்திலிருந்து விடுவிக்கப்பட்ட நிகழ்வு இத்தினத்தில் கொண்டாடப்படுகிறது. மேலும் இத்தினம் விடுதலை சமத்துவத்திற்கான இயக்கத்தில் மக்கள் சந்தித்த சவால்களை அங்கீகரிக்கிறது.
  • அட்லாண்டிக் கடல் பகுதியிலான அடிமைகள் வர்த்தகம் மற்றும் அடிமைத்தனத்தினால் பாதிக்கப்பட்டவர்களை நினைவுகூர்வதற்கான தினம்   மார்ச் 25, 2007ஆம் ஆண்டு ஏற்றுக் கொள்ளப்பட்ட தீர்மானத்தின் அடிப்படையில் ஐ.நா.பொது அவையினால் நிறுவப்பட்டது.
  • முதன் முறையாக இத்தினம் 2008ல் கடைபிடிக்கப்பட்டது அதிலிருந்து ஒவ்வொரு ஆண்டும் இத்தினம் கடைபிடிக்கப்படுகிறது. அதே ஆண்டு அட்லாண்டிக் கடல் பகுதியில் அடிமை வர்த்தகங்களினால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அடிமைத்தனத்தால் பாதிக்கப்பட்டவர்களின் நினைவைப் போற்றுவதற்காக ஐ.நா. பொது அவை அடிமைத் தனத்திற்கான  நினைவு கூர் திட்டத்தை நிறுவியது.
  • ஐ.நா.வின் பொதுத்தகவல் துறையின் எல்லைப்பிரிவின் கல்வி எல்லைப் பிரிவால் இத்திட்டம் நிர்வகிக்கப்படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்