இருபத்தியோராம் நூற்றாண்டிற்கான அமெரிக்க – ஐக்கியப் பேரரசு நாடுகளின் ஒரு பொருளாதாரக் கூட்டாண்மைக்கான அட்லாண்டிக் பிரகடனத்தினை அமெரிக்கா மற்றும் ஐக்கியப் பேரரசு ஆகிய நாடுகள் இணைந்து அறிவித்துள்ளன.
சீனாவினால் உருவாகி வரும் ஒரு போட்டியை எதிர்கொள்ளும் வகையில், பாதுகாப்பு மற்றும் புதுப்பிக்கத் தக்க ஆற்றல் ஆகியவற்றில் தொழில் சார் உறவுகளை மேம்படுத்துவதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
அட்லாண்டிக் பிரகடனமானது ஒரு நெகிழ்திறன் மிக்க, பன்முகப்படுத்தப்பட்ட மற்றும் பாதுகாப்பான தொடர் விநியோகச் சங்கிலியை உருவாக்குதல், உத்திசார் சார்புகளைக் குறைப்பதில் கவனம் செலுத்துகிறது.