உலகின் மிகப்பெரிய பனிப்பாறையான A23a அண்டார்டிகாவில் உள்ள ஃபில்ச்னர் பனிப்படலத்தில் இருந்து பிரிந்தது.
இது அதன் பயணத்தில் மிகவும் சமீபத்தில் தெற்கு அட்லாண்டிக் கடலில் மிதக்கத் தொடங்கியது.
சுமார் ஒரு டிரில்லியன் டன் எடை கொண்ட இது சுமார் 400 சதுர மைல்கள் அளவு பரப்பளவைக் கொண்டுள்ளது.
1986 ஆம் ஆண்டில் அண்டார்டிக் ஃபில்ச்னர் என்ற பனிப்படலத்தில் இருந்து பிரிக்கப் படுவதற்கு முன்பு, A23a ஆனது அண்டார்டிகாவின் வடமேற்கே கடல் தளத்தில் 37 ஆண்டுகளாக நிலைப்பெற்றிருந்தது.
இந்தப் பனிப்பாறையானது தற்போது தெற்கு ஜார்ஜியா தீவிலிருந்து 300 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது மற்றும் இரண்டு முதல் நான்கு வாரங்களில் அந்தப் பகுதியை வந்து சேரும்.