இங்கிலாந்தைச் சேர்ந்த பெண்ணான ஜாஸ்மின் ஹாரிசன் என்பவர் அட்லாண்டிக் பெருங்கடலைத் தனியாக படகில் கடந்த மிகவும் இளம் வயது பெண் என்ற பெருமையைப் பெற்றுள்ளார்.
2020 ஆம் ஆண்டின் தாலிஸ்கர் விஸ்கி அட்லாண்டிக் சேலஞ்ச் என்ற போட்டியில் முதலிடம் பிடித்ததன் மூலம் அவர் இந்த சாதனையை நிகழ்த்தினார்.