TNPSC Thervupettagam

அணி சேரா இயக்கத்தின் சந்திப்பு

July 26 , 2019 1855 days 1415 0
  • அணி சேரா இயக்கத்தின் (Non-Aligned Movement - NAM) ஒருங்கிணைப்பு மன்றத்தின்  அமைச்சர்களுக்கிடையேயான சந்திப்பானது வெனிசுலாவில் உள்ள காராகஸில் நடைபெற்றது.
  • 2019 ஆம் ஆண்டுச் சந்திப்பின் கருத்துரு, “சர்வதேசச் சட்டத்திற்கு மதிப்பளிப்பதன் மூலம் அமைதியை மேம்படுத்துதல் மற்றும் ஒருங்கிணைத்தல்” என்பதாகும்.
  • 2016 ஆம் ஆண்டு முதல் NAM அமைப்பின் தலைவராக வெனிசுலா இருந்து வருகின்றது. தற்பொழுது 2019 ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் NAM அமைப்பின் தலைவர் பதவி அஸர்பைஜானுக்குச் செல்லவிருக்கின்றது.

இதுபற்றி

  • NAM அமைப்பு 1961 ஆம்  ஆண்டு பெல்கிரேடில் ஏற்படுத்தப்பட்டது.
  • இது இந்தியாவின் முன்னாள் பிரதமரான ஜவஹர்லால் நேரு மற்றும் யூகோஸ்லேவியாவின் அதிபரான ஜோசிப் ப்ரோஸ் டிட்டோ ஆகியோரின் கூட்டு முயற்சியாகும்.
  • இது ஐக்கிய நாடுகளுக்குப் பிறகு 120 உறுப்பு நாடுகளைக் கொண்ட 2-வது மிகப் பெரிய சர்வதேச அமைப்பாகும்.
  • இது அமெரிக்கா மற்றும் சோவியத் இரஷ்யா ஆகிய நாடுகளினால் தலைமை தாங்கப்பட்ட கூட்டிணைவின் ஒரு பகுதியாக இல்லாமல் வளரும் நாடுகளுக்காக ஏற்படுத்தப்பட்ட ஒரு முதன்மை அமைப்பாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்