உகாண்டாவின் கம்பாலா நகரத்தில் அணிசேரா இயக்கத்தின் 19வது உச்சி மாநாடு நடைபெற்றது.
இந்த நிகழ்வின் கருத்துரு, "பகிரப்பட்ட உலகளாவிய வளத்திற்கான உள்ளார்ந்த ஒத்துழைப்பு" என்பதாகும்.
இந்த உச்சி மாநாடு பொதுவாக மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும்.
அஜர்பைஜானிடமிருந்து தலைமைப் பொறுப்பினைப் பெற்ற உகாண்டா அரசு 2027 ஆம் ஆண்டு வரை இதன் தலைவராக செயல்படும்.
இந்த உச்சி மாநாடு கம்பாலா பிரகடனத்தை ஏற்றுக் கொண்டது.
இந்த நிகழ்வின் போது, உகாண்டா அதிபர் யோவேரி முசெவேனி, 1970 ஆம் ஆண்டுகளில் இந்தியர்கள் வெளியேற்றப்பட்டதற்கு வருத்தம் தெரிவித்தார்.
1972 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில், உகாண்டாவின் சர்வாதிகாரியான இடி அமீன், உகாண்டாவில் வசிக்கும் மற்றும் வேலை செய்யும் இந்தியர்கள் மற்றும் பிற ஆசியர்களை வெளியேற்ற உத்தரவிட்டார்.
சுமார் 80,000 இந்தியர்கள் 90 நாட்களுக்குள் அந்நாட்டை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
தற்போது, உகாண்டாவின் மக்கள்தொகையில் 0.1%க்கும் குறைவான பங்கினைக் கொண்டுள்ள இந்தியர்கள்/இந்திய வம்சாவளி மக்கள் உகாண்டாவின் நேரடி வரிகளில் 70% பங்கினை அளிக்கின்றனர்.
தற்போது, அணிசேரா இயக்கம் ஆனது 120 உறுப்பினர் நாடுகள், 17 பார்வையாளர் நாடுகள் மற்றும் 10 பார்வையாளர் அமைப்புகளைக் கொண்டுள்ளது.
அணிசேரா இயக்கமானது நிரந்தர செயலகம் அல்லது முறையான ஸ்தாபன சாசனம், சட்டம் அல்லது ஒப்பந்தம் என எதையும் கொண்டிருக்கவில்லை.