வட கொரிய அணுஆயுதம் பயன்பாடு பூதாகரமாக வெடித்து வரும் வேளையில் தற்போது நடைபெற்று வரும் 72 வது ஐ.நா பொது அவை கூட்டத்தில் பலதரப்பு அணுஆயுதக் குறைப்பு ஒப்பந்தமான (multilateral disarmament treaty) அணுஆயுத தடை ஒப்பந்தத்தில் 51 உலக நாடுகள் கையெழுத்திட்டுள்ளன.
இதுவரை மொத்தத்தில் 122 நாடுகள் இந்த ஒப்பந்தத்தை ஆதரித்துள்ளன. இவற்றில் எந்தவொரு நாட்டிடமும் அணுஆயுதங்கள் கிடையாது.
50 நாடுகள் இந்த ஒப்பந்தத்தை பின்னேற்பளித்தால் (Ratification) இந்த ஒப்பந்தம் நடைமுறைக்கு வரும்.
அணுசக்தி வல்லமையுடைய 9 நாடுகள் எவையும் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.