TNPSC Thervupettagam

அணு ஆயுதங்களை சுமந்து செல்லும் அக்னி-5 ஏவுகணை

January 19 , 2018 2374 days 699 0
  • மிக நீண்ட தூரம் கண்டம் விட்டு கண்டம் சென்று தாக்கும் அக்னி-5 ஏவுகணையினை ஒடிசாவின் அப்துல் கலாம் தீவிலிருந்து விண்ணுக்கு செலுத்தி வெற்றிகரமாக இந்தியா பரிசோதித்துள்ளது.
  • இது 5000 கி.மீ வரை அணு ஆயுதங்களை சுமந்து சென்று தாக்கும் கண்டம் விட்டு கண்டம் பாயக்கூடிய ஏவுகணையாகும். இது முழு சீனாவையும் ஐரோப்பாவின் பெரும் பகுதியையும் தாக்கக் கூடிய திறன் படைத்ததாகும்.
  • இந்த ஏவுகணையானது முப்படைப்பிரிவுகளிலும் இந்தியாவின் அணு ஆயுதங்களை நிர்வாகிக்கும் யுக்திசார் படைப்பிரிவிலும் (Strategic Forces Command) இணைக்கப்பட இருக்கிறது.
  • அக்னி 5 ஏவுகணையினை ஒரு முறை ஏவிவிட்டால் அதனை தடுத்து நிறுத்த இயலாது. இடை நிறுத்த ஏவுகணைகள் (Interceptors) மூலமாகவே இதனை தடுத்து நிறுத்த இயலும். இவற்றினை அமெரிக்கா, ரஷ்யா மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகள் மட்டுமே வைத்திருக்கின்றன.
  • இந்தச் சோதனையானது 5வது முறையாக நடத்தப் பெற்ற சோதனை ஆகும். மேலும் இது நகரும் ஏவுதளத்திலிருந்து தொடர்ந்து மூன்றாவது முறையாக (தற்போதைய சோதனையையும் சேர்த்து ) ஏவப்பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்