TNPSC Thervupettagam

அணு ஆயுதங்களைத் தடை செய்வதற்கான ஐ.நா.வின் ஒப்பந்தம்

October 31 , 2020 1399 days 548 0
  • அணு ஆயுதங்களைத் தடை செய்வதற்கான ஐ.நா.வின் ஒப்பந்ததிற்குச் சுமார் 50 நாடுகள் ஒப்புதல் அளித்துள்ளன.
  • ஹோண்டுராஸிடமிருந்து 50வது ஒப்புதல் பெறப் பட்டதாக ஐ.நா அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
  • இது அந்த ஒப்பந்தத்தை தற்போது நடைமுறைக்குக் கொண்டு வந்துள்ளது.
  • அணு ஆயுதங்களைத் தடை செய்வதற்கான ஒப்பந்தமானது அணு ஆயுதக் குறைப்புக்கான முதலாவது பலதரப்பு மற்றும் கட்டுப்படுத்தும் ஒப்பந்தமாகும்.
  • இது அணு ஆயுதங்களைப் பயன்படுத்துதல், மேம்படுத்துதல், உற்பத்தி செய்தல், சோதனை செய்தல், நிலைப்படுத்தி வைத்தல், இருப்பு வைத்தல் மற்றும் அதைக் கொண்டு அச்சுறுத்தல் செய்தல் ஆகியவற்றைத் தடை செய்கிறது.
  • இது 193 உறுப்பினர்கள் அடங்கிய  ஐ.நா பொதுச் சபையால் 2017 ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் 122 நாடுகளின் ஒப்புதலுடன் ஏற்றுக் கொள்ளப் பட்டது.
  • ரஷ்யா, அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், சீனா போன்ற அணுசக்தி கொண்ட முக்கிய நாடுகள் இந்த ஒப்பந்தத்தை எதிர்த்தன.
  • பாகிஸ்தான், வட கொரியா மற்றும் இஸ்ரேலுடன் சேர்ந்து இந்தியாவும் இந்த ஒப்பந்தத்திற்கு வாக்களிப்பதைத் தவிர்த்தன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்