TNPSC Thervupettagam

அணு ஆயுதத் திறன் கொண்ட அக்னி - 5 ஏவுகணை – வெற்றிகரமாக சோதனை

December 13 , 2018 2046 days 594 0
  • மிக நீண்ட தூர அளவில் கண்டம் விட்டு கண்டம் சென்று இலக்கைத் தாக்கும் அக்னி-5 ஏவுகணையினை வங்காள விரிகுடாவின் ஒரிசா கடற்கரையில் அமைந்துள்ள அப்துல் கலாம் தீவிலிருந்து வானில் செலுத்தி இந்தியா வெற்றிகரமாக பரிசோதித்துள்ளது.
  • உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட தரையிலிருந்துத் தரையை நோக்கி இலக்கைத் தாக்கி அழிக்கும் இந்த ஏவுகணையின் 7-வது சோதனை இதுவாகும். கடந்த 6 மாதத்தில் நடைபெற்ற இரண்டாவது சோதனை இதுவாகும்.
  • அக்னி - 5 என்பது 5000 கிலோ மீட்டர் வரை இலக்கைத் தாக்கி அழிக்கும் திறன் பெற்ற மூன்று நிலையைக் கொண்ட ஏவுகணையாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்