TNPSC Thervupettagam

அணுகத்தகு துணிகரங்கள் மீதான சர்வதேச மாநாடு 2018

April 24 , 2018 2310 days 705 0
  • அணுகத்தகு துணிகரங்கள் மீதான சர்வதேச மாநாடு (International Conference on Accessible Adventure) அண்மையில் நேபாளத்தில் உள்ள பொக்ஹாராவில் நடைபெற்றது.
  • இந்த மாநாட்டின் கருப்பொருள் “உத்வேகம் மற்றும் வியர்த்தல்” (Inspiration and Perspiration) என்பதாகும்.
  • நேபாள சுற்றுலா ஆணையமானது (Nepal Tourism Board-NTB) இந்த மாநாட்டை ஒருங்கிணைத்துள்ளது.
  • அணுகத்தகு துணிகரங்களுக்கான ஆசியாவின் தலைநகராக (The Accessible Adventure capital of Asia) நேபாளத்தை உருவாக்கத் தேவையான கூட்டிணைவு, திட்டமிடல், விழிப்புணர்வு அர்ப்பணிப்பு தொடர்பாக இந்த மாநாடு நடத்தப்பட்டுள்ளது.
  • நேபாளத்தில் சுற்றுலாத் தொழிற்துறையில் அணுகுதலின் முக்கியத்துவம் (importance of accessibility)  மற்றும் சுற்றுலாத் துறையின் வளர்ச்சியின் மீது கவனம் செலுத்துவதற்காக  மார்ச் 30 ஆம் தேதியை புதிய வருடாந்திர, அனைவருக்குமான சுற்றுலா தினமாக (Tourism for All) இந்த மாநாடு   அறிவித்துள்ளது.
  • செயற்கைக் கால்கள் உடையோர், கண்பார்வை இல்லாதோர், மூளை வளர்ச்சி இல்லாதோர் உட்பட நகர்வு இயலாமை உடையவர்கள், மெதுவாக நடக்கும் முதியோர்கள் போன்றோர்களின் தேவைகளை சந்திப்பதில் கவனம் செலுத்தும் அணுகத்தகு சுற்றுலாவின் ஓர் துணைப்பிரிவாக அணுகத்தகு துணிகரங்கள் இருப்பதால் அவற்றின் மீது 2018 ஆம் ஆண்டிற்கான அணுகத்தகு துணிகரங்கள் மீதான சர்வதேச மாநாடு கவனம் செலுத்துகின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்