நாசா மற்றும் பாதுகாப்புத் துறை சார்ந்த மேம்பட்ட ஆராய்ச்சித் திட்டங்கள் முகமை (DARPA), செவ்வாய்க் கிரகத்திற்கு மனிதர்களை கொண்டு செல்லக் கூடிய அணு சக்தியில் இயங்கும் ஏவுகலங்களைப் பரிசோதிக்க உள்ளதாக சில அறிவிப்புகளை வெளியிட்டு உள்ளன.
இந்த அணுசக்தியில் இயங்கும் ஏவுகலங்களுக்கான அணு உலை மற்றும் எந்திரம் ஆகியவற்றினை DARPA உருவாக்க உள்ளது.
நாசா நிறுவனமானது 2027 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் ஒரு விண்வெளி சார்ந்த செயல் விளக்கத்தினை மேற்கொள்ளும் என எதிர்பார்க்கப் படுகிறது.
இந்தத் திட்டமானது, DRACO - விரைதிறனுடைய நிலவின் சுற்றுவட்டப்பாதைச் சார்ந்த நடவடிக்கைகளுக்கான செயல் விளக்க ஏவுகலம் என அழைக்கப்படும்.
DRACO நிறுவனமானது அணுக்கரு பிளவு வினை செயல்முறையினை இயக்க உள்ளது.
அமெரிக்கா அரசானது 1955 ஆம் ஆண்டில் இந்தத் தொழில்நுட்பத்தை பரிசோதிக்கத் தொடங்கியது, ஆனால் நிதிப் பற்றாக்குறையால் இந்தத் திட்டம் நிறுத்தப்பட்டது.
அணுக்கருப் பிளவு மூலம் இயங்கும் ஏவுகலங்கள் பயண நேரத்தை வெகுவாகக் குறைக்க அறிவியலாளர்களுக்கு உதவும்.