TNPSC Thervupettagam

அணுசக்தி கூட்டாண்மைக்கான உலகளாவிய மையம்

November 29 , 2020 1375 days 591 0
  • அணுசக்தி கூட்டாண்மைக்கான உலகளாவிய மையத்தின் ஒத்துழைப்பிற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தை இந்தியாவும் அமெரிக்காவும் 10 ஆண்டுகள் நீட்டித்து உள்ளன.
  • இது அணுசக்தித் துறையின் கீழ் நிறுவப் பட்டுள்ள ஹரியானாவில் உள்ள ஒரு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் ஆகும்.
  • இது சர்வதேச சமூகத்துடன் இந்தியாவின் ஒத்துழைப்பை வலுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • இது முதன் முதலில் நவம்பர் 2010 ஆம் ஆண்டில் கையெழுத்தானது.
  • புதுடில்லியில் நடைபெற்ற 3வது 2 + 2 அமைச்சர்கள் மட்டத்திலான அமெரிக்க-இந்திய பேச்சுவார்த்தையின் போது இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தத்தை நீட்டிக்க ஒப்புக் கொள்ளப் பட்டது.
  • 2+2 என்பது இரு நாடுகளின் பாதுகாப்பு மற்றும் வெளியுறவு அமைச்சகங்களுக்கு இடையேயான ஒரு பேச்சுவார்த்தையாகும்.
  • ஜப்பான் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளுடன் இந்தியா 2 + 2 பேச்சுவார்த்தையை நிறுவியுள்ளது.
  • அமெரிக்காவும் இந்தியாவும் 2008 ஆம் ஆண்டில் முக்கியத்துவம் வாய்ந்த இந்திய-அமெரிக்க அணுசக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்