TNPSC Thervupettagam

அணுசக்தி கோட்பாடு திருத்தம் - ரஷ்யா

November 28 , 2024 25 days 68 0
  • ரஷ்யாவின் அணு ஆயுதக் கொள்கையில் மேற்கொள்ளப்பட்ட மாற்றங்களுக்கு அதிபர் விளாடிமிர் புடின் ஒப்புதல் அளித்துள்ளார்.
  • மாஸ்கோ அணு ஆயுதங்களை, தனது எதிரி நாடுகளைத் தடுக்கும் ஒரு வழிமுறையாக கருதுகிறது மற்றும் அவற்றைப் பயன்படுத்துவதைக் கருத்தில் கொள்ள வேண்டிய சூழ்நிலைகளை நிர்ணயித்து வருகிறது.
  • அதன் அணுசக்தி எதிர்ப்பு ஆனது மற்ற அணுசக்தி நாடுகளை மட்டும் அல்லாமல், ரஷ்யாவிற்கு எதிரானத் தாக்குதலை உருவாக்குவதற்கு அல்லது நடத்துவதற்கு தனது நிலம், நீர் அல்லது வான்வெளியைப் பயன்படுத்துவதற்கு அனுமதிக்கும் இதர பிற நாடுகளையும் இலக்காகக் கொண்டுள்ளது.
  • ரஷ்யா தனது நெருங்கிய நட்பு நாடான பெலாரஸையும் அதிகாரப்பூர்வமாக தனது அணுசக்தி பாதுகாப்பின் கீழ் கொண்டு வந்துள்ளது.
  • தற்போது அது தனக்கு எதிராகவோ அல்லது பெலாரஸுக்கு எதிராகவோ "அதன் இறையாண்மை அல்லது பிராந்திய ஒருமைப்பாட்டிற்கு முக்கியமான அச்சுறுத்தலை உருவாக்கும்" வழக்கமான தாக்குதல் ஏற்பட்டால் கூட தனது அணு ஆயுதங்களைப் பயன்படுத்தலாம்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்