TNPSC Thervupettagam

அணுசக்தி சார் நிறுவல்களின் பரிமாற்றப் பட்டியல் 2025

January 3 , 2025 3 days 68 0
  • முப்பது ஆண்டு கால நடைமுறையின் ஒரு தொடர்ச்சியாக, ஜனவரி 01 ஆம் தேதியன்று இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகள் தங்களது அணுமின் நிலையங்களின் பட்டியலைப் பரிமாறிக் கொண்டுள்ளன.
  • இரு நாடுகளும் ஒன்றுக்கொன்று தங்களது அணுமின் நிலையங்களைத் தாக்குவதைத் தடுக்கின்ற இருதரப்பு ஒப்பந்தத்தின் கீழ் இது மேற்கொள்ளப்பட்டுள்ளது.
  • இந்த ஒப்பந்தம் ஆனது, 1988 ஆம் ஆண்டு டிசம்பர் 31 ஆம் தேதியன்று கையெழுத்திடப் பட்டு, 1991 ஆம் ஆண்டு ஜனவரி 27 ஆம் தேதியன்று நடைமுறைக்கு வந்தது.
  • ஒவ்வொரு நடப்பு ஆண்டிலும் ஜனவரி 01 ஆம் தேதியன்று இந்த ஒப்பந்தத்தின் கீழ் குறிப்பிடக் கூடிய அணுசக்தி நிறுவல்கள் மற்றும் மையங்கள் குறித்து இரு நாடுகளும் அதன் பரஸ்பர தகவல்களைத் தெரிவிக்க வேண்டும் என்று இந்த ஒப்பந்தம் என்பது வலியுறுத்துகிறது.
  • இரு நாடுகளுக்கிடையிலான இத்தகையப் பட்டியல்களின் ஒரு தொடர்ச்சியான 34வது பரிமாற்றம் இதுவாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்