TNPSC Thervupettagam

அணுசக்தி விமானம் தாங்கி கப்பல் - சீனா

March 7 , 2018 2454 days 1318 0
  • லையோனிங் [Liaoning] எனும் நாட்டின் முதல் அணுசக்தி (Nuclear Powered) விமானம் தாங்கி போர் கப்பலை கட்டமைக்க உள்ளதாக சீன தேசியக் கப்பல் கட்டும் நிறுவனம் தெரிவித்துள்ளது.
  • சீனா தனது முதல் விமானம் தாங்கி கப்பலான லையோனிங்கை உக்ரைனிடமிருந்து 2012ல் வாங்கியது.

  • சீனாவின் இரண்டாவது மற்றும் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட முதல் விமானம் தாங்கி கப்பலான Type 001A என்ற விமானம் தாங்கி கப்பல் கடந்த ஆண்டு சீனக் கடற்படையில் இணைக்கப்பட்டது.
  • தற்போது சீனக் கடற்படையானது வழக்கமான எரிபொருள் எண்ணெய்யில் இயங்கும் இரு விமானம் தாங்கி கப்பல்களைக் கொண்டுள்ளது.
  • அமெரிக்க கடற்படையின் நிமிட்ஜ் வகுப்பு (Nimitz Class) மற்றும் போர்ட் வகுப்பு (Ford Class) விமானம் தாங்கி கப்பல்கள் அணுசக்தி ஆற்றலில் இயங்குகின்றன.
  • பிரெஞ்ச் கடற்படையின் சார்லஸ்-டி-கௌல்லே (Charless de Gaulle) விமானம் தாங்கி கப்பல் மட்டுமே அணுசக்தி ஆற்றலில் இயங்குகின்ற அமெரிக்காவைச் சேராத விமானம் தாங்கி கப்பலாகும்.

.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்